அப்பாடா! ஒரு வழியாக ஸ்பூர்த்தி ஜெயிச்சாச்சு! “ரொம்ப
சந்தோஷமா இருக்கு.”
“எல்லாம் இன்பமயம்” என்று ஸ்பூர்த்தி எடுத்ததுமே தெரிந்து
விட்டது, இன்னிக்கு ஒரு சூப்பர் பெர்ஃபார்மென்ஸ் கொடுக்கப் போகிறாள் என்று.
கொஞ்சமும் ஏமாற்ற வில்லை.
பரத் வருவாரென்று நினைத்தேன். அது நடக்க வில்லை. அவர்
எப்படியும் தனுஷுக்குப் பாடப் போகிறார். ஸ்ரீஷா வும் அப்படித்தான். பின்னணி பாட
சான்ஸ் உன்டு என்று உறுதியளிக்கப் பட்டுள்ளது. அனுஷ்யா தான் கொஞ்சம் பாவம். அவள்
பாடியதிலேயே எனக்கு ரொம்பப் பிடித்தது “எந்த ஊர் போனாலும்”.
முந்தின சீசனில் மிகவும் சங்கீத அறிவுள்ள குழந்தைகளுக்கு
(பிரகதி) முதலிடம் கிடைக்காத குறையை இந்த வருஷம் விஜய் டி.வி. போக்கி விட்டது.
எல்லாப் போட்டிகளின் முடிவிலும் ஏதாவது சர்ச்சை இருந்து
கொண்டேதான் இருக்கும். இந்த முடிவுகளிலும் கண்டிப்பாக இருக்கும்.
ஸ்பூர்த்திக்கும், அவள் அப்பா அம்மாவுக்கும் ஒரு பணிவான
வேண்டுகோள். குழந்தைக்கு அபாரமான சங்கீத அறிவு இருக்கிறது. அதை ஸினிமா
சங்கீதத்தில் கரைத்து விடாதீர்கள். ஒரு சுதா ரகுனாதன் போல, நித்யஸ்ரீ போல வர
வேண்டிய குழந்தை.
நிறைய ஆசீர்வாதங்கள். நிறைய சுற்றிப் போடுங்கள்.
0 comments:
Post a Comment