நேற்று நான் தமிழில் எழுதப்பட்ட செய்திகள் படித்தேன். மிகவும் கடினமான நடையில் எழுதப்பட்டிருந்தது. சாதாரணமாகப் படிப்பவர்களால் எளிதாகப் புரிந்து கொள்ள முடியாது போல் தொன்றியது.
இப்படி எழுதுபவர்கள் அவசியம் தேவன், கல்கி, சாவி ஆகியோர் எழுத்துக்களைப் படிக்க வேண்டும். மிக எளிமையான நடை. எழுதுவது எல்லொருக்கும் புரிய வேண்டும். இல்லையென்றால் எழுதுவதை விட வேண்டும்.
நான் படிக்கும் காலத்தில் ஜயகாந்தன் முதலியோர் மிகவும் புரியாத நடையில் எழுதினர். அவற்றைப் படிக்க ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கும். வாய் வலிக்க அலசும்.எளிமையான எழுத்துக்களை அலட்சியமாகப் பார்க்கும்.
தயவு செய்து எளிமையாக எழுதப் பழகுங்கள். அதுதான் தமிழை வளர்க்கும்.
0 comments:
Post a Comment