எழுதவேண்டுமென்ற ஆசை வெகு நாளாகவே எனக்கு உண்டு. ஆனாலும்
அந்த ஆசை முழுவதும் நிறைவேறாமலே இருக்கிறது.
சின்ன வயசிலிருந்தெ புத்தகம் படிக்கும் ஆர்வம் நிறைய.
முதலில் தமிழில். வீட்டில் பத்திரிகைகள் வாங்கி அதிலிருந்த தொடர் கதைகளைச்
சேர்த்து ‘பைண்ட்’ செய்து வீட்டில் அடுக்கி வைத்திருப்போம். கல்கி, ஆனந்த விகடன்
மட்டும் தான்.குமுதம் கிடையவே கிடையாது. அதில் வரும் கதைகள் எங்களைப் போன்ற
சிறியவர்கள் படிப்பதற்கு...
Thursday, October 16, 2014
Saturday, April 19, 2014
மெதுவாகப் படிக்கும் இயக்கம்
உங்களுக்குத் தெரியுமொ? மெதுவாக, ஆற அமரப் படிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு இயக்கமே இருக்கிறதாமே?
இப்போதெல்லாம் நாம் படிக்கும் முறையே மாறியிருப்பது கண்கூடு. எந்தப் பக்கத்தையும் முழுதாகப் படிக்கும் வழக்கமே போய் விட்டது. இதற்குக் காரணம் இணையத்தின் தாக்கம் தான். அதில் படித்துப் படித்து, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் தாவித் தாவி நுனிப்புல் மேய்வது ஒரு இயல்பாகி விட்டது. பக்கம் முழுவதும் படிக்கப்...
Monday, March 24, 2014
படிக்கும் படியான எழுத்து
டாக்டர் ருடால்ப் ப்லெஷ் என்பவர் எழுதிய "படிக்கும் படியான எழுத்துக் கலை" படித்திருக்கிறீர்களா? இது 1949ம் வருஷம் எழுதப் பட்ட புத்தகம். அது இன்றைக்கும் உபயோகமாக இருப்பது தான் இதன் விசேஷம்.
ஓய்வு பெற்ற நாளிலிருந்து விடாப் பிடியாக வலைப் பதிவுகள் படித்து வருகிறேன். பல பதிவுகளைப் படிக்கும் போது இந்தப் புத்தகத்தின் நினைவு வரும்.
மூச்சு வாங்கும் படியான வாக்கியங்களின் நீளம், புரிந்து கொள்ளவே முடியாத வார்த்தைகள்,...
Saturday, February 22, 2014
காலை நடை
இதில் எனக்கு தேர்ச்சி உண்டு.
நீங்கள் மாக்ஸ் பீர்போம் எழுதிய கட்டுரையை ("seeing people off") படித்திருக்கிறீர்களா? இல்லை என்றால் உடனே படித்து விடுங்கள். "எனக்கு இதில் தேர்ச்சி இல்லை" என்று ஆரம்பித்திருப்பார். கட்டுரை விஷயம் வேறு என்றாலும் இந்த துவக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த கட்டுரையை ஏறக்குறைய 45 வருஷங்களுக்கு முன்னால் என்னுடைய கல்லூரி உரை நடைப் புத்தகத்தில் படித்தேன்.
போகட்டும். நான்...
Subscribe to:
Posts (Atom)