இன்று தமிழில் எழுதப்பட்ட பல உள்ளீடல்கள்('ப்லாக்') படித்தேன். மிக மகிழ்சியாக இருந்தது. ஆங்கிலத்துக்கு அடுத்த படியாக தமிழில்தான் உள்ளீடல்கள் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன்.
எத்தனை நகைச்சுவையான எழுத்துக்கள்! நகைச்சுவை இன்னும் செத்து விடவில்லை என்று நன்றாகத் தெரிகிறது.
தேவனைப் பற்றிப் பலர் எழுதி இருந்தார்கள். உண்மையான வார்தைகள். கல்கியும் சற்றும் சளைத்தவர் இல்லைதான். நாடொடியின் கட்டுரைகளும் அப்படித்தான். சாவியின் 'வாஷிங்டனில் திருமணம்' நகைச்சுவை எழுத்தின் உச்ச கட்டம்! பாக்கியம் ராமசாமியின் சீதாப் பாட்டி, அப்புசாமி தாத்தாவை மறக்க முடியுமா?
என் ஒரே வேண்டுகோள்: நிறைய எழுதுங்கள். எளிமையாக எழுதுங்கள்.
Monday, July 17, 2006
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment