இப்போதுதான் தேவனின் “மிஸ்டர் வேதாந்தம்” படித்து
முடித்தேன். முன்னாலேயே படித்ததுதான். இப்போதும் அதே மாஜிக் இருப்பதுதான் விசேஷம்.
என்ன மாதிரி கதை சொல்லும் திறன்! என்ன ஒரு எழுத்து! இன்னும்
மெய்மறந்து நிற்கிறேன்.
சில பாட்ஸ்மென் விளையாடும் போது மிகவும் சுலபமாக
விளையாடுவது போல் இருக்கும். அப்படி விளையாடுவதற்குப் பின்னால் இருக்கும் கடுமையான
உழைப்பு நமக்குத் தெரியாது. அவர்களைக் கேட்டால் சொல்லுவார்கள்....