எழுதவேண்டுமென்ற ஆசை வெகு நாளாகவே எனக்கு உண்டு. ஆனாலும்
அந்த ஆசை முழுவதும் நிறைவேறாமலே இருக்கிறது.
சின்ன வயசிலிருந்தெ புத்தகம் படிக்கும் ஆர்வம் நிறைய.
முதலில் தமிழில். வீட்டில் பத்திரிகைகள் வாங்கி அதிலிருந்த தொடர் கதைகளைச்
சேர்த்து ‘பைண்ட்’ செய்து வீட்டில் அடுக்கி வைத்திருப்போம். கல்கி, ஆனந்த விகடன்
மட்டும் தான்.குமுதம் கிடையவே கிடையாது. அதில் வரும் கதைகள் எங்களைப் போன்ற
சிறியவர்கள் படிப்பதற்கு...