Monday, March 24, 2014

படிக்கும் படியான எழுத்து

டாக்டர் ருடால்ப் ப்லெஷ் என்பவர் எழுதிய "படிக்கும் படியான எழுத்துக் கலை" படித்திருக்கிறீர்களா? இது 1949ம் வருஷம் எழுதப் பட்ட புத்தகம். அது இன்றைக்கும் உபயோகமாக இருப்பது தான் இதன் விசேஷம். ஓய்வு பெற்ற நாளிலிருந்து விடாப் பிடியாக வலைப் பதிவுகள் படித்து வருகிறேன். பல பதிவுகளைப் படிக்கும் போது இந்தப் புத்தகத்தின் நினைவு வரும். மூச்சு வாங்கும் படியான வாக்கியங்களின் நீளம், புரிந்து கொள்ளவே முடியாத வார்த்தைகள்,...