Saturday, February 22, 2014

காலை நடை

இதில் எனக்கு தேர்ச்சி உண்டு. நீங்கள் மாக்ஸ் பீர்போம் எழுதிய கட்டுரையை ("seeing people off") படித்திருக்கிறீர்களா? இல்லை என்றால் உடனே படித்து விடுங்கள். "எனக்கு இதில் தேர்ச்சி இல்லை" என்று ஆரம்பித்திருப்பார். கட்டுரை விஷயம் வேறு என்றாலும் இந்த துவக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த கட்டுரையை ஏறக்குறைய 45 வருஷங்களுக்கு முன்னால் என்னுடைய கல்லூரி உரை நடைப் புத்தகத்தில் படித்தேன். போகட்டும். நான்...