எழுதவேண்டுமென்ற ஆசை வெகு நாளாகவே எனக்கு உண்டு. ஆனாலும் அந்த ஆசை முழுவதும் நிறைவேறாமலே இருக்கிறது.

சின்ன வயசிலிருந்தெ புத்தகம் படிக்கும் ஆர்வம் நிறைய. முதலில் தமிழில். வீட்டில் பத்திரிகைகள் வாங்கி அதிலிருந்த தொடர் கதைகளைச் சேர்த்து ‘பைண்ட்’ செய்து வீட்டில் அடுக்கி வைத்திருப்போம். கல்கி, ஆனந்த விகடன் மட்டும் தான்.குமுதம் கிடையவே கிடையாது. அதில் வரும் கதைகள் எங்களைப் போன்ற சிறியவர்கள் படிப்பதற்கு லாயக்கில்லை என்பது என் அம்மா, அப்பவின் தீர்மானமான முடிவு. பெரும்பாலும் இது அம்மாவின் முயற்சி.

அம்மா ஐந்தாம் வகுப்பு கூடத் தாண்டியதில்லை. 15, 16 வயதிலேயே கல்யாணம் ஆகி விட்டது. ஆனாலும் கதைகள்படிப்பதை நிறுத்தாமல் குழந்தைகள் பிறந்த பின்னும் தொடர்ந்தார்கள். அப்பாவுடைய உத்தியோகத்தில் ஊர் ஊராக மாற்றுவதால் அவரை வீட்டில் பார்பதே அபூர்வம்.

வாரா வாரம் பத்திரிகை வந்ததும் அதை முதலில் படிப்பதற்கு வீட்டில் ஒரே சண்டை நடக்கும். கல்கியில் வீர விஜயன் என்ற சித்திரக் கதை வந்து கோண்டிருந்தது. எனக்கு மிகவும் இஷ்டமான தொடர். கதை எழுதியது யார் என்று நினைவில்லை. ஆனால் படம் வரைந்தது ‘வினு’.ஒல்லியாக மிகவும் உயரமாக இருக்கும் விஜயன் ஒரு சந்தர்ப்பத்தில் கட்டு மஸ்தான தேகத்துடன் கொஞ்சம் குட்டையாக மிகப் பெரிய வீரனாக மாறி விடுவான்.

எனக்குப் படிக்கத் தெரியும் போதே வீட்டில் இப்படி ‘பைண்ட்’ செய்த புத்தகங்கல் நிறைய இருந்தன. லக்ஷ்மி, தேவன், கல்கி, ஜக சிற்பியன், அகிலன், சரோஜா ராமமூர்த்தி, அனுத்தமா என்று பல புகழ் பெற்ற கதாசிரியர்கள் எழுதிய தொடர்கதைகள்.

அவற்றைப் படிக்கும் போதெல்லாம் மனத்தில் ஒரு ஏக்கம் இருக்கும். நாமும் இப்படி எப்போதுதான் எழுதப் போகிறோமோ  என்று பெரு மூச்சு விடுவேன்.

கல்லூரியில் சேர்ந்த போது, ஆங்கில நாவல்களின் பரிச்சயம் ஏற்பட்டது. பி.ஜி.வுட்ஹவுஸ், டு மாரியா, ஏ.ஜே. க்ரானின், ஸாமர்செட் மாம் என்று படித்துத் தள்ளினேன்.

நான் படிக்கிற காலத்தில் பட்டப்படிப்பு முதல் வருஷம் பரிக்ஷை கிடையாது. ஆகவே சைக்கிளை மிதித்துக் கோண்டு கல்லூரி நூலகத்துக்குப் படை எடுத்து விடுவேன். ஒருத்தருக்கு இரண்டு புத்தகங்கள். அது இரண்டு நாட்களுக்குக் கூடத் தாங்காது. திரும்ப சைக்கிள் ஓட்டம், வேகாத வெய்யிலில்.

இதுபோக உள்ளூர் நூலகத்திலும் மெம்பெராகச் சேர்ந்து அங்கேயும் படிக்க ஆரம்பித்தேன்.
இந்த மாதிரிப் படிப்பு உத்தியோக காலத்திலும் தொடர்ந்தது. முதல் உத்யோகம் கல்லூரி ஆசிரியராக. கேட்க வேண்டுமா, நூலகத்திலேயே பழியாகக் கிடப்பேன். அங்குதான் வெளி நாட்டுப் பத்திரிகைகளைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. ‘டைம்’ ‘ ந்யூஸ்வீக்’ ‘லைப்’ போன்ற பத்திரிகைகள். அப்புறம் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’.

அங்கிருக்கும் போது தெசிய பொழுதுபோக்கான ஐ. ஏ.எஸ் தேர்வுக்கு தயார் செய்ய ஆரம்பித்தேன். அந்தக் காலத்தில் கல்லூரி ஆசிரியர்கள் பெரும்பாலோர் இந்தப் பரிக்ஷைக்காக முயற்சிப்பது வழக்கம்.

அதனால்  நேருவின் ‘டிஸ்கவரி ஆப் இந்தியா’, அப்புறம் உலக சரித்திரங்கள் என்று பல வகையான புத்தகங்களின் பரிச்சயம் ஏற்பட்டது. ஐ. ஏ.எஸ் தேறவில்லை என்பது வேறு கதை. ஆனால் அதில் செய்த பயிற்சி இன்னொரு நிறுவனத்தில் நல்ல வேலைக்கு வழி செய்தது. அதில் ஆரம்ப சம்பளமே அப்போது வேலை பார்த்து வந்த கல்லூரி முதல்வரின் சம்பளத்தை விட அதிகம்! ஒரே ஓட்டம்தான்.

மும்பையில் வேலை பார்க்கும் போது அலுவலகம் போய் வர ஒரு நாளைக்கு 3 மணி நேரம் பிரயாணம் செய்ய வேண்டும். ஆகவே கூட்டம் பிதுங்கும் ரயிலில் நெரிசலுக்கு நடுவில் நின்று கொண்டு புத்தகம் படிக்கும் கலையைக் கற்றுக் கொண்டேன். அது ஒன்றுதான் ரயில் பிரயாண சிரமங்களை மறக்க வைக்கும் மருந்து.

ஆரம்ப நாட்களில் ஆபீஸில் ஷிப்ட் உண்டு. ஒரு கம்ப்யூட்டர் டேப்பை மாட்டி விட்டால் அது முடிந்து இன்னொரு டேப் மாட்டுவதற்கு அரை மணி நேரம் ஆகும். அந்த இடைவெளியிலும் படிக்கலாம். பத்திரிகைகள், புத்தகங்கள் தாராளமாகக் கிடைக்கும்.

இப்படியாகப் படிப்பதற்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால் எழுத வேண்டும் என்கிற ஆசை மட்டும் நிறைவேறவே இல்லை.

என் முதல் சீரியஸ் எழுத்து என் நண்பனுக்கு அப்போது பிரபலமாக ஓடிக் கொண்டிருந்த பால சந்தரின் பட விமரிசனம் தான். ஜெமினி கணேசன் நடித்த படம். அதைப் படித்த நண்பன் புளகாங்கிதத்துடன் ஓடி வந்தான். ‘ரொம்ப நல்லா இருக்குடா, நீ பேசாமல் எழுத்தாளனாகப் போகலாம்’ என்றான். எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.

ஒரு பத்திரிகைக்கு நீதிக் கதை ஒன்று எழுதி அனுப்பினேன். ஸ்டாம்ப் வைக்கவிட்டாலும் அது சுவற்றில் அடித்த பந்து போலத் திரும்பி வந்துவிட்டது. அதன் பிறகு எதையும் பத்திரிகைகளுக்கு அனுப்ப வில்லை.

பயிற்சிக் காலத்தில் ஒரு ‘திடுக்’ கதை எழுதி அலுவலகத்துக்கு உள்ளே வெளியாகும் பத்திரிகைக்குக் கொடுத்தேன். அது பிரசுரமானதும் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அப்போது ஏர் இந்தியாவின் ‘எம்ப்பரர் அசோகா’ என்ற விமானம் விமான நிலயத்திலிருந்து கிளம்பிய சிறிது நேரத்துக்கெல்லாம் வெடித்துச் சிதறியது. அதைக் களமாகக் கொண்டு அந்தக் கதையை எழுதியிருந்தேன்.

 அதன் பிறகு உத்தியோகக் கட்டாயத்தில் நிறைய எழுதும் சந்தர்ப்பம் வந்தது. எல்லாம் ஆங்கிலத்தில். உத்தியோகம் சார்ந்த எழுத்துக்கள். மேலதிகாரிகளைத் தலை ஆட்டவைக்கும் ‘நோட்ஸ்’, அலுவலகக் குழந்தைகளுக்கு ‘மான்யுவல்’, ஏகப் பட்ட ‘ப்ரஸென்டேஷன்’ இப்படி வகை வகையாக எழுதிக் குவித்தேன். ஆங்கிலம் மட்டுப் பட்டது; கையகப் பட்டது. எளிமையாக எழுதக் கற்றுக் கொண்டேன்.

தமிழில் எழுதும் வாய்ப்பே வர வில்லை.

ஒரு நாலைந்து வருஷங்களுக்கு முன்னால் வலைப் பதிவுகள் தலை காட்ட ஆரம்பித்தன. இது என் போன்ற ஆட்களுக்கு ஒரு வரப் ப்ரசாதமாகத் தெரிந்தது.

முன்பெல்லாம் நம் எழுத்தை அச்சில் காண்பதற்கு மிகவும் மெனக்கெட வேண்டும். தாளின் ஒரு புறம் மட்டும் எழுத வேண்டும். நல்ல கையெழுத்து வேண்டும். அடித்தல் திருத்தல் இல்லாமலிருக்க வேண்டும். பிழைகள் குறைவாக இருக்க வேண்டும். தபாலில் அனுப்பி விட்டுக் காத்திருக்க வேண்டும். அதிர்ஷ்ட தேவதை கண் திறந்தால் பத்திரிகையில் பிரசுரமாகும். இல்லாவிட்டால் ஆழமான கருங்கடலில் கல்லைப் போட்டது போல் மறைந்து போகும்.

ஆனால் வலைப் பதிவுகள் ஆரம்பித்ததிலிருந்து அப்படியில்லை. ஒரு கம்ப்யூட் டர், அதில் வேலை செய்யக் கொஞ்சம் பயிற்சி, ஒரு இன்டர்னெட் இணைப்பு இருந்தால் போதும். வலைப் பதிவு எழுதுவது எளிமையாகி விட்டது. ஒரு ப்ளாக்கர் பகவானோ, இல்லை வொர்ட்ப்ரெஸ் அன்னையோ துணை செய்தால் போதும். டைப் செய்யுங்கள், பிரசுரியுங்கள். தீர்ந்தது விஷயம்! யாராவது படிகிறார்களா இல்லையா என்ற கவலை வேண்டாம். நீங்கள் எழுதியது காலம் காலமாக அழியாமல் நிலைத்து நிற்கும்.

அகஸ்மாத்தாக யாராவது படித்துப் பின்னூட்டம் (கமெண்ட்) போட்டு விட்டால் போதும், தலை கால் புரியாது. அது நம்மைத் திட்டி வந்த பின்னூட்டமாக இருந்தாலும் கவலையில்லை. யாரோ ஒருவர் எப்படியோ நாம் எழுதியதைப் படித்திருக்கிறார்களே, அதுவே மகிழ்ச்சி அளிக்கும் விஷயம்.

ஆரம்பத்தில் இந்த மாதிரியான வலைப் பதிவுகள் ஆங்கிலத்தில் தான் இருந்தன. ஆனால் நம்மவர்கள் சும்மா விடுவார்களா என்ன? உடனே தமிழில் எழுத பல்வேறு ஆயுதங்களைக் கண்டு பிடித்து உதவினார்கள். அவ்வளவுதான், தமிழில் எழுதுவோர் எண்ணிக்கை ஒரே குதியாகக் குதித்து மேலே சென்றது. திரும்பிய இடங்களிலெல்லாம் தமிழ் முழக்கம்.
ஆரம்ப காலத்தில் கடுமையான முயற்சியில் தமிழ் எழுதுவது போய், சுலபமாக எழுதும் முறைகள் வழக்கத்துக்கு வந்தன. தமிழில் தட்டச்சுத் தெரியாமலே என் போன்றவர்கள் ஆங்கில தட்டச்சுப் பலகையில் (அது தானப்பா, கீ போர்ட்) தமிழில் அழகுற எழுத முடிகிறது. இதற்குப் பாடு பட்ட வல்லுனர்கள் அனைவர்க்கும் ஒரு பெரிய வணக்கம்.

இந்த வலைப் பதிவுகள்போடுவதில் வித விதமான அனுபவங்கள் கிட்டும். ‘நல்ல பதிவு நன்றி’ என்ற வகையில் சில பின்னூட்டங்கள். இவை வலையில் தன் பெயரைக் காட்டுவதற்காக ஒரு முயற்சி. சில பின்னூட்டங்கள் உங்களை உசுப்பி விட்டு உன்னைப் போல உண்டா என்று பெருமையில் மார்பை விரிய வைக்கும்.

தருமிக்கு வாய்த்த சோழனின் மந்திரி போல குற்றம் கண்டு பிடித்து ஏசுவதற்காகவே சிலர் அவதாரம் எடுத்திருப்பார்கள். சிலர் விரும்பத்தகாத வார்த்தைகளில் பின்னூட்டம் போடுவார்கள். வேறு சிலர் தம்முடைய வலைப் பதிவில் கன்னா பின்னா என்று நாம் எழுதிய வலைப் பதிவைத் திட்டி எழுதுவார்கள். ரொம்பவும் ரோசமாக இருக்கும் நமக்கு.
“வேணும்னா படிக்கட்டும், இல்லேனா பேசாமல் இருக்க வேண்டியதுதானே! எதற்காக இந்தத் தண்டனை” என்று தோன்றும்.


இந்தத் திட்டலுக்குப் பலவித காரணங்கள் இருக்கலாம். நாம் எடுத்துக் கொண்ட விஷயம் பிடிக்காமல் இருக்கலாம். அல்லது அந்த விஷயத்தில் நாம் வெளியிட்ட கருத்துக்கள் பிடிக்காமல் போகலாம். மொழியை நன்றாக எழுதாமல் விட்டிருக்கலாம். எழுத்துப் பிழைகள், இலக்கணப் பிழைகள் மலிந்திருக்கலாம். உங்களுக்குத் தெரியுமொ? மெதுவாக, ஆற அமரப் படிப்பதை ஊக்குவிக்கும் பொருட்டு ஒரு இயக்கமே இருக்கிறதாமே?

இப்போதெல்லாம் நாம் படிக்கும் முறையே மாறியிருப்பது கண்கூடு. எந்தப் பக்கத்தையும் முழுதாகப் படிக்கும் வழக்கமே போய் விட்டது. இதற்குக் காரணம் இணையத்தின் தாக்கம் தான். அதில் படித்துப் படித்து, ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கம் தாவித் தாவி நுனிப்புல் மேய்வது ஒரு இயல்பாகி விட்டது. பக்கம் முழுவதும் படிக்கப் பொறுமையில்லை.

இந்த கெட்ட வழக்கம் புத்தகம் படிப்பதற்கும் பரவி விட்டதும் தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயம்.

முன்பெல்லாம் புத்தகக் கடையில் நமக்கு வேண்டிய புத்தகத்தைத் தேர்ந்தெடுக்க என்ன செய்வோம்? அட்டைப்படம் பார்ப்போம்; புத்தகத்தைத் திருப்பி பின் அட்டையில் எழுதப்பட்டிருக்கும் விஷயத்தைப் படிப்போம்; அப்படியும் முடிவு செய்ய முடிய வில்லை என்றால் பக்கங்களைத் திருப்பி வேகமாக சில பக்கங்களைப் படிப்போம். புத்தகம் பிடித்திருந்து வாங்கிப் போனால், வீட்டில் ஆற அமர உட்கார்ந்து புத்தக வாசனையை முகர்ந்து கொண்டு படிக்க ஆரம்பிப்போம்.

இப்போதெல்லாம் படிப்பதில் ஒரு அவசரம். கவனமின்மை. படிப்பது எதுவும் புரிவதில்லை.

இணையம் நமது புத்தியை மழுங்கடித்து விட்டது என்று ஒரு பெரிய புத்தகம் கூட வந்து விட்டது.

இதில் உண்மை இருக்கிறது என்பது என் அனுபவத்திலேயே தெரிகிறது. ஒரு பத்துப் பக்கம் ஒரேயடியாகப் படிக்க முடிவதேயில்லை.

இதனால்தான் இப்படிப் பட்ட இயக்கம் துவங்கியுள்ளது. ஈ-புக் படிக்கலாம்; ஆனால் தனியாக அதற்காக வந்துள்ள கருவிகளின் மூலம். அப்போதுதான் வேறு எதிலும் கவனம் போகாது. ஒரே மூச்சில் படிப்பது தேவையில்லை. மெதுவாக வார்தைகளின் அழகு, அவற்றைக் கோர்க்க முயற்சி செய்யும் கதாசிரியரின் திறமை, இவற்றை அனுபவித்துப் படிக்க வேண்டுமென்பது இந்த இயக்கத்தினரின் நோக்கம்.

ட்விட்டர், பேஸ்புக் யுகக் குழந்தகளுக்கு இது மிகவும் அவசியம்.டாக்டர் ருடால்ப் ப்லெஷ் என்பவர் எழுதிய "படிக்கும் படியான எழுத்துக் கலை" படித்திருக்கிறீர்களா? இது 1949ம் வருஷம் எழுதப் பட்ட புத்தகம். அது இன்றைக்கும் உபயோகமாக இருப்பது தான் இதன் விசேஷம்.

ஓய்வு பெற்ற நாளிலிருந்து விடாப் பிடியாக வலைப் பதிவுகள் படித்து வருகிறேன். பல பதிவுகளைப் படிக்கும் போது இந்தப் புத்தகத்தின் நினைவு வரும்.

மூச்சு வாங்கும் படியான வாக்கியங்களின் நீளம், புரிந்து கொள்ளவே முடியாத வார்த்தைகள், இவை எழுதுபவர் சொல்ல வருவதைக் குழப்பி விடுகின்றன. இப்படிப்பட்ட பதிவுகளைக் கண்டதும் காத தூரம் ஓடுவது என் வழக்கம்.

நான் மேற் சொன்ன புத்தகம் மட்டுமல்ல, மற்றும் பலரும் இதையே சொல்லியிருக்கிறார்கள். சின்ன, எளிதான வார்த்தைகளைத் தேர்ந்தெடுங்கள்; சுலபமாக அவைகளைக் கோர்த்து சின்ன வாக்கியங்களாக எழுதுங்கள்; உரையாடும் தமிழில் எழுதுங்கள்.  அதற்காக கொச்சையாக எழுத வேண்டாம்.

ஆங்கிலத்தில் லீ சைல்ட் புத்தகங்கள் படித்துப் பாருங்கள். அவருடைய வெற்றிக்கு அவரின் எழுத்து நடையும் பெரிய காரணம். எந்த ஒரு வாக்கியமும் 8 முதல் 12 வார்த்தைகளுக்கு மேல் போகாது. ரொம்ப இலக்கண சுத்தமான வாக்கியங்கள் இருக்காது. ஆனால் அவை கதைப் போக்கின் அவசரத்தை அதிகப் படுத்தும். வர்ணனை ஆகட்டும், உரையாடல் ஆகட்டும், இதே மொழிதான், வாக்கிய கட்டுமானம் தான்.

தமிழிலும் இப்படி எழுதுபவர்கள் நிறையப் பேர் உண்டு. ஆங்கிலத் தாக்கம் இல்லாமலே தமிழில் இப்படி நிறையப் படித்திருக்கிறேன்.

மொழியின் முக்கியமான நோக்கம் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளுவதுதானே? அதுவே மறைந்து விடும் போது அடிப்படையிலேயே தவறு நடக்கிறது என்பது என் எண்ணம்.

அதற்காக வர்ணனைகள் கூடாது என்று சொல்ல வில்லை. கல்கியின் வர்ணனைகளைப் படித்துப் பாருங்கள், நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது தெரியும்.இதில் எனக்கு தேர்ச்சி உண்டு.

நீங்கள் மாக்ஸ் பீர்போம் எழுதிய கட்டுரையை ("seeing people off") படித்திருக்கிறீர்களா? இல்லை என்றால் உடனே படித்து விடுங்கள். "எனக்கு இதில் தேர்ச்சி இல்லை" என்று ஆரம்பித்திருப்பார். கட்டுரை விஷயம் வேறு என்றாலும் இந்த துவக்கம் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த கட்டுரையை ஏறக்குறைய 45 வருஷங்களுக்கு முன்னால் என்னுடைய கல்லூரி உரை நடைப் புத்தகத்தில் படித்தேன்.

போகட்டும். நான் இப்போது சொல்ல வந்தது என்னுடைய காலை நடையைப் பற்றியது. நானும் கடந்த 25 வருஷங்களாக இதைத் தொடர்ந்து செய்து வருகிறேன்.

உலகத்தின் பல தெருக்களில் நடந்திருக்கிறேன். வெய்யில், மழை, உறை பனி இப்படி எது இருந்தாலும் கவலைப் படாமல் நடந்திருக்கிறேன். கனத்த ஷு, இல்லை மெல்லிய செருப்பு இப்படி எது கிடைத்தாலும் காலில் மாட்டிக் கொண்டு கிளம்பி விடுவேன்.

நடக்கும் போது பலர் காதில் மாட்டிக் கொண்டு நடப்பார்கள். அதன் மறு முனையில் செல் போன் அல்லது பாட்டு பாடும் கருவி இருக்கலாம். இது எனக்கு பிடிக்காத விஷயம்.

காலை வேளை நடையில் தனி சுகம். வித விதமான சப்தங்கள் காதில் விழும். அண்ணாந்து பார்த்தால் ஒன்றும் தெரியாது. ஆனால் மரங்களில் ஒளிந்து கொண்டிருக்கும் பறவைகள் எழுப்பும் இதமான ஒலிகளைக் கேட்டிருக்கிறீர்களா? காதில் மாட்டிக் கொண்டால் இது எப்படி காதில் விழும்?

நடக்கும் மற்றவர்களை கவனிப்பதில் ஒருஅலாதியான சுவரசியம் இருக்கத்தான் செய்கிறது.

பலர் கணவன் மனைவியாக நடக்கிறார்கள். சில ஜோடி மௌனமாக நடக்கும். சிலர் நிறுத்தாமல் பேசிக் கொண்டே நடப்பார்கள். சின்ன சண்டை கூட போடப்படுகிரதோ என்று எனக்குத் தோன்றும்.

நண்பர்களாக சிலர் நடப்பார்கள்.பெரும் பாலும் அரசியல் பேச்சாக இருக்கும். எல்லா தலைவர்களின் தலையும் உருளும். அரசியல் என்றாலே சண்டை இல்லாமலா? அதுவும் நடந்து பார்த்திருக்கிறேன்.

காலை வேளையில் சிலர் கூடி பலத்த சத்தம் போட்டு செயற்கையாக சிரித்துக் கொண்டிருப்பார்கள். அதில் ஒரு விஷயம் கவனித்தேன். அப்படி கூடி சிரிப்பவர்கள் எல்லாரும் வயசானவர்கள். (60++). அவர்களுக்குத் தான் அப்படி சிரிக்க வேண்டும் என்று தோன்றுகிறதோ?
Even my blog posts have version numbers now!!

The 'new' iPad is out. Every tech journalist worth his/her salt has something to say on the new device. The Apple fanboys are understandably elated; they eagerly await their delivery of the new gadget.

I strongly think it's just a consumer device. Just like you own smartphones, you own a tablet. People stretch their imagination to invent their usefulness in various environments.

I hardly ever seen iPad in our company. No CEO demanded its inclusion in our trusted network. They do use their smartphones to access their mail and sms texts. Nobody wants to see a spreadsheet in their phones. Nobody edits documents in them.

Lame excuses have been given to add a keyboard to the tablet. I think it defeats the very purpose of having a tablet in the first place. Please remember we have both ipad classic and ASUS transformer with keyboard in our household. They are good for surfing web pages, seeing youtube videos and of course reading ebooks in ePub and PDF formats.

Every gadget has its place and usefulness. Don't stretch them to be everything for everybody. This is age of specialization, isn't it?Popular Posts

Recent Posts